கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி, முதல் சீசனைப் போல விறுவிறுப்பாக இல்லை என்ற விமர்சனங்கள் இருந்தாலும், தற்போதைய பிக் பாஸ் வீட்டிலும் அவ்வபோது சில சர்ச்சையான விஷயங்கள் நடந்துக் கொண்டிருக்கின்றனர்.
அதிலும், மிட் நைட் மசாலா என்ற தலைப்பில் இணையத்தில் ஒளிபரப்பபடும் எபிசோட்களில் ஆண் மற்றும் பெண் போட்டியாளர்களின் கசமுசா பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.
இந்த நிலையில், ஐஸ்வர்யாவால் தாடி பாலாஜி அவமாப்படுத்தப்பட, அதை தொடர்ந்து அவர் அதிரடியான முடிவு எடுத்துள்ளார். இதனால் இன்றைய பிக் பாஸ் போட்டி சர்ச்சையும், விறுவிறுப்பும் நிறைந்ததாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பிக்பாஸ் வீட்டின் தலைவராக இருக்கும் ஐஸ்வர்யா மற்ற போட்டியாளர்களிடம் எல்லை மீறி மோசமாக நடந்துவருகிறார்.
அவர் பாலாஜி சோபாவில் உட்கார்ந்து கொண்டிருக்கும் போது குப்பைத் தொட்டியை எடுத்து அனைத்து குப்பைகளையும் அவர் மீது கொட்டுகிறார். இதனால் மனமுடைந்த அவர் நாமினேஷன் நடக்கும்போது தன்னை தானே நாமினேட் செய்துகொள்கிறார். மேலும் நான் வீட்டை விட்டு போகிறேன், என்றும் அவர் சொல்கிறார்.
எனவே, இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பரபரப்பான நாடகம் அரங்கேறப் போவது உறுதியாகியுள்ளது.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...