வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி ஒரே நாளில் மட்டும் 12 படங்கள் வெளியாக உள்ளது திரையுலகினரையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கட்டுப்பாட்டின் படி வாரம் நான்கு திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த வாரம் 12 படங்கள் வெளியாவது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஏற்கனவே கார்த்தியின் ‘கடைக்குட்டி சிங்கம்’ மற்றும் ‘தமிழ்ப் படம் 2’ ஆகிய படங்கள் தமிழகத்தின் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஒட்டிக்கொண்டிருக்கும் நிலையில், கடந்த வாரம் விஜய் சேதுபதியின் ‘ஜுங்கா’ மற்றும் திரிஷாவின் ‘மோகினி’ திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளது.
இந்த படங்களே முக்கியமான திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இந்த வாரம் வெளியாக உள்ள 12 படங்களுக்கு சரியான திரையரங்கங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும், இந்த 12 படங்களில் 11 படங்கள் வெளியாவது உறுதி என்றும் சொல்லப்படுகிறது.
இதில், ஆர்யாவின் ‘கஜினிகாந்த்’ படத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. காரணம் நடிகர்கள் மற்றும் ஹர ஹர மஹாதேவகி மற்றும் இருட்டு அறையில் முரட்டு குத்து என இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்த சந்தோஷ் பி.ஜெயக்குமாரி இயக்கியிருக்கும் மூன்றாவது என்பதோடு, இப்படம் யு சான்றிதழும் பெற்றிருக்கிறது.
இந்த வாரம் வெளியாக உள்ள படங்களில் பட்டியல் இதோ,
கஜினிகாந்த்,
மணியார் குடும்பம்,
காட்டுப்பய சார் இந்த காளி
எங்க காட்டுல மழை
அழகுமகன்
போயாஅரளி
கடிகார மனிதர்கள்
உப்பு புளி காரம்
நாடோடி கனவு
கடல் குதிரைகள்
அடுத்த வாரம் கமலின் ‘விஸ்வரூபம் 2’ படம் வெளியாவதாலும், அதற்கு அடுத்த வாரம் நயந்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ படம் ரிலீஸ் ஆவ இருப்பதாலும், இந்த படங்களை இப்படி ஒட்டு மொத்தமாக ரிலீஸ் செய்வதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...