சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் அதிகரித்து வருவதாக பல நடிகைகள் புகார் கூறி வருகிறார்கள். நடிகை ஸ்ரீ ரெட்டி இந்த விவகாரத்தில் வெளிப்படையாக தன்னை பயன்படுத்தியவர்களின் பெயர்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில், இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் அதிதி ராவ். இவர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘காற்றின் இடைவெளி’ படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். தற்போது பல இந்தி படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில், பட வாய்ப்பு தருவதாக கூறி சிலர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு அவர் கண்டிப்பாக முடியாது, என்று கூறி வெளியேறியதால் 8 மாதங்கள் எந்த பட வாய்ப்பும் இல்லாமல் இருந்தாராம்.
மேலும், 2013 ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தை நினைத்து அவர் அடிக்கடி வீட்டில் தணியாக இருக்கும் போது அழுவாராம்.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...