கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 2, தற்போது 40 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. முதல் சீசனைப் போல இரண்டாம் சீசன் மக்களை கவரவில்லை என்றும், பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும் கருத்துகள் நிலவி வருகிறது.
மேலும், மிட் நைட் என்ற தலைப்பில் டிவி-யில் ஒளிபரப்ப முடியாத காட்சிகளை இணையத்தில் வெளியிடுவதாலும், அதற்காகவே பெண் போட்டியாளர்கள் சிலர் அறைகுறை ஆடையில் இருப்பதாகவும் புகாரும் எழுந்துள்ளது.
இந்த நிலையில், பிக் பாஸ் முதல் சீசனின் போட்டியாளரான நடிகர் வையாபுரி, இரண்டாம் சீசன் பிக் பாஸ் குறித்து கருத்து கூறுகையில், மக்கள் மத்தியில் பிக்பாஸ் 2 போட்டியாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்த தவறிவிட்டனர். அடைகளை குறைத்து அணிந்து நிகழ்ச்சிகளில் தோன்றுவதால் பெரியளவில் ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கி விட முடியாது, என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தனக்கு போட்டியாளர் மஹத்தை பிடிக்கவில்லை, என்று கூறியவர், ஜனனி அல்லது ரித்விகா இருவரில் ஒருவர் தான் பிக் பாஸ் 2 டைடிலை வெல்வார்கள், என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...