சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் மு.கருணாநிதி உடல் நிலை குறித்து விசாரிக்க பல்வேறு சினிமா பிரபலங்கள் மருத்துவமனைக்கு வருகிறார்கள். ரஜினி, கமல், சூர்யா, விக்ரம் ஆகியோரை தொடர்ந்து, இன்று காலை நடிகர் விஜய் மருத்துவமனைக்கு வருகை தந்தார்.
மருத்துவமனையில் இருந்த மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து நடிகர் விஜய் கருணாநிதி உடல் நிலை குறித்து கேட்டறிந்தார்.
இந்த நிலையில், இன்று மாலை நடிகர் அஜித்குமார் காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதி உடல் நிலை குறித்து நேரில் விசாரித்தார்.
தற்போது ‘விஸ்வாசம்’ படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் அஜித், காவேரி மருத்துவமனைக்கு நேரில் வந்து ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து கருணாநிதி உடல் நிலை குறித்து விசாரித்தார்.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...