நடிப்பு இயக்கம் என்று பிஸியாக இருக்கும் பிரபு தேவா, தற்போது பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தனுஷையும் இயக்க செய்துள்ளார். ஆனால், இந்த இயக்கம் ஒரே ஒரு பாடலில் மட்டுமே. ஆம், பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ‘மாரி 2’ படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு பிரபு தேவா நடனம் அமைத்துக் கொடுத்துள்ளார்.
சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தின் மூலம் மீண்டும் யுவன் சங்கர் ராஜவுடன் இணைந்திருக்கும் தனுஷ், படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றுக்கு பிரபு தேவா நடனம் அமைக்க வேண்டும் என்று விரும்பி, தனது விருப்பத்தை அவரிடம் தெரிவிக்க அவரும் உடனே சம்மதம் தெரிவித்து, அந்த ஒரு பாடல் காட்சியில் தனுஷை இயக்கிவிட்டாராம்.
இது குறித்து ரசிகர்களிடம் பகிர்ந்துக் கொண்ட தனுஷ், நான் இந்த விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் பெருமிதம் அடைகிறேன். இந்தியாவில் நடனம் வளர்வதற்கு காரணமான பிரபுதேவா, ‘மாரி 2’ படத்தில் எங்களுக்காக ஒரு பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். அவருடைய மேஜிக்கைப் பார்த்து வளர்ந்த எனக்கு, இது மிகப்பெரிய தருணம், நன்றி சார், என்று தெரிவித்துள்ளார்.
தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்க, வரலட்சுமி, டொவினோ தாமஸ், கிருஷ்ணா, ரோபோ சங்கர், வினோத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...