‘துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான கார்த்திக் நரேன், தனது முதல் படத்தின் மூலம் தமிழ் சினிமா பிரபலங்கள் பலரடு கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார். இளம் வயதிலேயே தெளிவான திரைக்கதையோடு இவர் தனது படத்தை கையாண்ட விதத்தைப் பார்த்த ரசிகர்களும், திரையுலக பிரமுகர்களும் இவரது அடுத்தப் படத்தின் மீது ஆர்வம் கொண்டனர்.
அதன்படி, அரவிந்த்சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், ஆத்மிகா, இந்திரஜித் என பெரிய நட்சத்திர பட்டாளத்தை அவித்து ‘நரகாசூரன்’ என்ற படத்தை ஆரம்பித்த கார்த்திக் நரேன், தனது திட்டமிடலின் காரணமாக படத்தை குறித்த நேரத்தில் முடித்து விட்டார். இருந்தாலும் சில பிரச்சினைகளில் சிக்கி படம் வெளியாகமல் இருந்தது.
இந்த நிலையில், நேற்று நடைபெற்ற இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சந்தீப் கிஷன், தான் சினிமாவுக்கு நடிக்க வந்து இதுவரை செய்யாத ஒன்றை, இயக்குநர் கார்த்திக் நரேனுக்கு செய்ததாக கூறியிறுக்கிறார்.
அதாவது, கார்த்திக் நரேனிடம் சந்தீப் கிஷன் கதை கேட்காமலேயே படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம். இப்படி கதை கேட்காமல் அவர் ஒப்புக்கொண்ட முதல் படம் ‘நரகாசூரன்’ தானாம்.
தொடர்ந்து பேசிய சந்தீப், “நான் பொறியியல் படிப்பில் சேர்ந்துவிட்டு, பின்னர் நடிகனாக போகிறேன், எனக் கூறி பாதியில் நின்ற போது, படிக்காமல் இருக்கதான் இந்த காரணத்தை சொல்கிறேன், என என் பெற்றோர் நினைத்தனர்.
ஆனால், தற்போது நான் நடிகனாக இருப்பதை நினைத்து அவர்கள் பெருமைப்படுகின்றனர். நல்லவேளை அன்று நீ எனது பேச்சை கேட்கவில்லை என்று என் தந்தை கூறினார். கார்த்திக் நரேன் ஒரு பர்பெக்ட்டான இயக்குநர். மிக தெளிவாக ஸ்கிரிப்ட் செய்து எங்களிடம் வேலை வாங்கினார். படம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.” என்றார்.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...