கமல்ஹாசன் நடித்து இயக்கி தயரித்த விஸ்வரூபம் திரைப்படத்திற்கு எவ்வளவு பெரிய பிரச்சினை ஏற்பட்டது என்பதை தமிழகம் மட்டும் இன்றி இந்தியாவே நன்கு அறியும். அந்த பிரச்சினையால், தமிழகத்தை விட்டே சென்றுவிடுவேன், என்று கமல் கூறியதும் அனைவரும் அறிந்தது தான். பிறகு பல போராட்டங்களுக்கு பிறகு வெளியான படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இதற்கிடையே, ‘விஸ்வரூபம் 2’ படத்தை தயாரித்து இயக்கி நடித்திருக்கும் கமல்ஹாசன், இதற்கு நடுவே மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினாலும், படத்தின் பணிகளையும் விரைவாக முடித்து ஆகஸ்ட் 10 ஆம் தேதி படத்தை வெளியிட இருக்கிறார்.
விஸ்வரூபம் படத்திற்கு வந்தது போன்ற எந்த பிரச்சினையும் ‘விஸ்வரூபம் 2’ படத்திற்கு வராது என்று கூறிய கமல், அப்படி வந்தால் அதை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது தனக்கு தெரியும், என்றும் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், விஸ்வரூபம் 2 படத்திற்கு தடை விதிக்க கோரி பிரமிட் சாய்மீரா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
‘மர்மயோகி’ படம் தொடர்பாக ஒப்பந்தம் போட்ட கமல்ஹாசன் பிரமிட் சாய்மீரா நிறுவனத்திடம் இருந்து முன் பணமாக ரூ.6.90 கோடியை பெற்றதோடு, கதை, திரைக்கதை, வசனம் எழுதுவதற்கான சம்பளமாக ரூ.4 கோடியை பெற்றாராம். ஆனால், இந்த பணத்தை மர்மயோகி படத்திற்கு பயன்படுத்தாமல், உன்னைப் போல் ஒருவன் படத்திற்கு அவர் பயன்படுத்திவிட்டதாக குற்றம் சாட்டியுள்ள பிரமிட் சாய்மீரா தற்போது அந்த பணத்தை திரும்ப கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறது.
இல்லை என்றால், ‘விஸ்வரூபம் 2’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும், என்று மனுவில் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...