Latest News :

காமெடி நடிகர்களை சீரியஸ் நடிகர்களாக்கிய ’அண்ணனுக்கு ஜே’!
Thursday August-02 2018

இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியும், பாக்ஸ் ஸ்டார் ஸ்டியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘அண்ணனுக்கு ஜே’. வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ராஜ்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் தினேஷ் ஹீரோவாகவும், மஹிமா நம்பியார் ஹீரோயினாகவும் நடித்துள்ளார்கள்.

 

ராதாரவி முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கும் இப்படத்தில் மயில்சாமி, வையாபுரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

 

அர்ரோல் கொரளி இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஓளிப்பதிவு செய்ய, ஜி.பி.வெங்கடேஷ் எடிட்டிங் செய்துள்ளார். 

 

இன்று நடைபெற்ற இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் ராஜ்குமார், “முதலில் வெற்றிமாறன் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன், இப்படத்திற்கு பக்கபலமாக கூட இருந்துள்ளார். நடிகர் தினேஷ் அவர்களுக்கு முழுக்கதையை சொல்லாமலேயே நடிக்க வைத்தேன்.நடிகை மஹிமா மேக்கப் கூட போடாமல் நடித்திருந்தார். மயில் சாமி மற்றும் வையாபுரி இருவரும் எப்பபோதும் நகைச்சுவை நடிகர்களாக பல படங்களில் நடித்து இருப்பார்கள் ,இந்தபடத்தில் ஒரு சீரியஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.” என்றார்.

 

Annanukku Jai

 

நடிகர் தினேஷ் பேசுகையில், “இந்த படத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இயக்குநர் ராஜ்குமார் அவர்களுக்கும் வெற்றிமாறன் அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மஹிமா அருமையாக நடித்துள்ளார்.இசையமைப்பாளர் அர்ரோல் 7 பாடல்கள் நன்றாக இசையமைத்துள்ளார். ராதா ரவி அவர்களுடன் நடித்தது மிக்க சந்தோசமாக உள்ளது. இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும்.” என்றார்.

 

இசையமைப்பாளர் அர்ரோல் கொரளி பேசும் போது, “இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்த வெற்றிமாறன் மற்றும் ராஜ்குமார் ஆகியோர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.எனது மற்ற படங்களை விட இந்த படத்தில் ஒருவித வித்யாசமான முறையில் இசையமைத்துள்ளேன். 7 பாடல்களும் ஒவ்வொருவிதம்.” என்று தெரிவித்தார்.

 

மஹிமா நம்பியார் பேசும் போது, “வெற்றிமாறன் போன்ற பெரிய இயக்குனரின்  தயாரிப்பு நிறுவனத்தில் படம் நடிப்பது சந்தோசமாக உள்ளது.இந்தப்படத்தில் தர லோக்கல் கதாபாத்திரத்தில் மேக்கப் இல்லாமல் நடித்துள்ளேன்.இயக்குனர் ராஜ்குமார் அவர்களுக்கு நன்றி.மேலும் இந்த படத்தில் எனது சொந்த குரலில் டப்பிங் செய்துள்ளேன்.” என்றார்.

 

இயக்குநர் வெற்றிமாறன் பேசும் போது, “பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெற்றிமாறன் பேசியவை " நடிகர் தினேஷ் தனது முழு எனர்ஜி வாய்ந்த  நடிப்பை தந்துள்ளார்.படத்தில் நடித்த அனைவரும் அருமையாக நடித்துள்ளார்.இயக்குனர் ராஜ்குமார் நல்ல படத்தை தந்துள்ளார்.படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.” என்றார்.

Related News

3166

”கண்டிப்பாக உங்களை இந்த நிகழ்வு ஆச்சரியப்படுத்தும்” - உறுதியளித்த பிரபுதேவா
Sunday January-12 2025

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...

”பெண்கள் இல்லாமல், நம் உலகம் இல்லை” - நடிகர் ஜெயம் ரவி உருக்கம்
Saturday January-11 2025

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...

Recent Gallery