பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான ‘கும்கி’ மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ‘கும்கி 2’ என்ற தலைப்பில் பிரபு சாலமன் இயக்கி வருகிறார்.
முதல் பாகத்தைக் காட்டிலும் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘கும்கி 2’ வில் ஹீரோவாக மதியழகன் அறிமுகமாகிறார். ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை. வில்லனாக ஹரிஷ் பெராடி நடிக்க, இவர்களுடன் ஆர்.ஜே.பாலாஜி, சூசன், கோலங்கள் சீரியல் திருச்செல்வம், ஸ்ரீநாத், ஆகாஷ், மாஸ்டர் ரோகன், மாஸ்டர் ஜோஸ்வா, பேபி மானஸ்வி ஆகியோர் நடிக்கிறார்கள். டைடில் கதாப்பாத்திரமாக உன்னி கிருஷ்ணன் என்ற யானை நடிக்கிறது.
சுகுமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்க, புவன் எடிட்டிங் செய்கிறார். தென்னரசு கலைத் துறையை கவனிக்க, ஸ்டன் சிவா ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்கிறார். பிரபாகரன் தயாரிப்பு மேற்பார்வையை கவனிக்க, பென் இந்தியா லிமிடெட் சார்பில் ஜெயந்திலால் காடா தயாரிக்கிறார்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு மைசூர் அருகே உள்ள சிவ சமுத்திரம் அருவியில் விறு விறுப்பாக நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. எம்.ஜி.ஆர் நடித்த ‘இதயக்கனி’ படப்பிடிப்பிற்கு பிறகு அந்த இடத்தில் நடக்கும் தமிழ்ப் படத்தின் படப்பிடிப்பு என்றால் அது ‘கும்கி 2’ பட படப்பிடிப்பு தானாம்.
மேலும், இந்த படத்திற்காக யானை மற்றும் ஹீரோயின் என இரண்டு விஷயங்களுக்கு இயக்குநர் பிரபு சாலமன் ரொம்பவே சிரமப்பட்டு விட்டாராம். தற்போது யானை கிடைத்துவிட்டாலும், ஹீரோயின் மட்டும் இன்னும் கிடைக்கவில்லையாம். அதனால், ஹீரோயின் இல்லாத காட்சிகளை படமாக்கி வருகிறார்.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...