அஜித்தை வைத்து படம் இயக்கிய இயக்குநர் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1997 ஆம் ஆண்டு அஜீத், மந்த்ரா, கவுண்டமணி, செந்தில் ஆகியோரது நடிப்பில் வெளியான படம் ‘ரெட்டை ஜடை வயசு’. இப்படத்தை இயக்கியவர் சி.சிவக்குமார். பாக்யராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர், ‘ரெட்டை ஜடை வயசு’ படத்திற்கு பிறகு படம் இயக்க வாய்ப்பு கிடைக்காததால் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில், 49 வயதாகும் இயக்குநர் சிவகுமார், அவரது வீட்டில் அழுகிய பிணமாக கண்டெடுக்கப்ப்பட்டிருக்கிறார்.
அவர் வீட்டில் துர்நாற்றம் வருவதாக, அவர் வீட்டு அருகே இருப்பவர்கள் போலீசில் புகார் தெரிவிக்க, அதன்பேரில் வெளியே பூட்டப்பட்ட சிவகுமாரின் வீட்டை போலீசார் உடைத்தனர். அப்போது நாற்காலில் அமர்ந்த நிலையில் இயக்குநர் சிவகுமார் இறந்து இருந்தார். மேலும் அவரது உடல் அழுகிய நிலையில் இருந்ததால் துர்நாற்றம் வீசியுள்ளது.
இதையடுத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், சிவகுமார் இறந்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் இருக்கும் என்று தெரிவித்ததோடு, பூட்டப்பட்ட வீட்டில் அவர் இறந்து இருப்பதால், இதனை சந்தேகத்திற்கு உரிய வழக்காக எடுத்துக்கொண்டுள்ளனர்.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...