பழமையான மற்றும் புராதனமான கார்களின் கண்காட்சி வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் நடைபெற உள்ளது.
மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டாரிங் கிளப் சார்பில் நடத்தப்படும் இந்த கண்காட்சியில், பழமையான மற்றும் புராதனமான 140 க்கும் மேற்பட்ட கார்கள் மற்றும் 35 க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களும் பங்குபெற உள்ளது.
திருவான்மியூர், தெற்கு அவென்யூ வாசுதேவன் நகரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்சன் செண்டரில் ஆக்ஸ்ட் 5 ஆம் தேதி காலை 9 மணி முதல் 1.30 மணி வரை நடைபெற உள்ள இந்த கார் கண்காட்சியை திரைப்பட நடிகர் சத்யராஜ் தொடங்கி வைக்கிறார்.
12.30 மணியளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட கார் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு பெடரேஷன் ஆஃப் ஹிஸ்டாரிக் வெஹிகிள்ஸ் இந்தியாவின் (FHVI) தலைவரான டாக்டர்.ரவி பிரகாஷ் பரிசளித்து கெளரவப்படுத்துகிறார்.
1920 ஆம் ஆண்டில் இருந்து 1970 ஆம் ஆண்டு வரையில் புகழக்கத்தில் இருந்த ஜாக்குவார், எம்.ஜி, டாட்ஜ் பிரதர்ஸ், செவர்லேட், போர்டு, பீகட், ஆஸ்டின் மற்றும் மெர்சடிஸ் போன்ற புகழ் பெற்ற நிறுவனங்களின் வாகனங்கள் சிறந்த பராமரிப்பில் உள்ள வாகனங்கள் பல பிரிவுகளின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசளிக்கப்பட உள்ளன.
வாகன தொழிலில் முன்னணி நிறுவனங்களான டாபே, எம்.ஆர்.எப், சுந்தரம் மோட்டார்ஸ் மற்றும் தேவேந்ரா போன்றவற்றின் ஆதரவுடன் நடைபெறும் இந்த கண்காட்சிக்கு அனுமதி முற்றிலும் இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விபரங்களை நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டாரிங் கிளப் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...