தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் தேர்தலில் விஷாலை எதிர்த்து நடிகர் ரித்திஷ் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
‘பொறுக்கி அல்ல நாங்கள்’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ராதாரவி, ஜே.கே.ரித்தீஷ், சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் நடிகர் ஜே.கே.ரித்தீஷ் பேசுகையில், “தமிழ் சினிமாவில் சின்ன சின்ன படங்கள் வெற்றி பெற வேண்டும் என்பது தான் என் ஆசை. ஏனெனில் இப்படிப்பட்ட சின்ன படங்கள் தான் தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். இந்த படத்தில் நடித்திருப்பவர்கள் பெரிய ஆளாக வர வேண்டும்.
விரைவில் நடைபெற உள்ள நடிகர் சங்க தேர்தலில் நானும் போட்டியிட இருக்கிறேன். ராதாரவி போன்றவர்கள் என்னுடன் இருக்கிறார்கள்.” என்றார்.
கடந்த நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணிக்காக தீவிர பிரச்சாரம் செய்த ரித்தீஷ், விஷால் அணியினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தற்போது அவர்களை எதிர்த்து வருவதோடு, ராதாரவியுடன் சேர்ந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...