நடிகர் ரஜினிகாந்த் அதிமுக-வில் இணைய வாய்ப்பு இருப்பதாக, அக்கட்சியை சேர்ந்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ், ரஜினிகாந்த் அதிமுக வில் இணைந்து தலைமை பொறுப்பு வர திட்டமிட்டுள்ளதாக பேட்டில் ஒன்றில் தெரிவித்தார். மேலும், தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் ஐடி ரைடின் மூலம் அதிமுக-வில் உள்ள சில முக்கிய நபர்களை வெளியேற்றிவிட்டு, ரஜினியை அங்கு அமர்த்த பா.ஜ.க முடிவு செய்துள்ளதாகவும், அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அதிமுகவில் இணைவதற்கு வாய்ப்ப் இருப்பதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்திருப்பது, தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பேட்டியளித்த அமைச்சர் பாண்டியராஜன், “ஒரு பக்கம் கலைஞரையும் புகழ்கிறார், எம்ஜிஆரையும் புகழ்கிறார், ரஜினிகாந்த் நிலைப்பாடு குறித்து உறுதியான தகவல் தெரியவில்லை.
கருணாநிதியின் தனிப்பட்ட செயல்பாடுகளையும் எம்ஜிஆரின் ஆட்சியையும் ரஜினி புகழ்வதன் மூலம் எம்.ஜி.ஆர் ஆட்சியை தர விரும்புவதாக கூறுகிறார். அதிமுகவில் உள்ள எம்ஜிஆர் விசுவாசிகளை ஈர்க்க ரஜினி முயல்கிறாரா என்ற கேள்விக்கு, அதிமுகவுடன் இணைந்து செயல்பட ரஜினி விரும்பக் கூடும் என்று பாண்டியராஜன் தெரிவித்தார், கூட்டணிக்கான வாய்ப்புகள் ரஜினிக்கு திறந்து இருப்பதாக நீங்கள் கூறுவதன் பொருளை எடுத்துக் கொள்ளலாமா என்ற கேள்விக்கு, கூட்டணிக்கு வாய்ப்பு மட்டுமல்ல, ரஜினிகாந்த் எங்களுடன் இணைந்து செயல்படவும் வாய்ப்புள்ளது.” என்று பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...