தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்த கஸ்தூரி, தமிழ்ப் படம் இன்றி தெலுங்கு, கன்னடம் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர், சமீபத்தில் வெளியான ‘தமிழ்ப் படம் 2’ வில் ஒரு பாடலுக்கு குத்தாம் போட்டார்.
இந்த நிலையில், தான் நடித்த படங்களில் பேசிய சம்பளத்தை ஒழுங்காக் கொடுக்காமல் தன்னை பலர் ஏமாற்றியிருக்கிறார்கள், என்று நடிகை கஸ்தூரி கூறியிருக்கிறார்.
டிவிட்டர் ஆக்டிவாக இருக்கும் நடிகை கஸ்தூரி, அவ்வபோது ரசிகர்களுடன் உரையாடுவதோடு, சில விஷயங்களில் சண்டையும் போடுவார். இருப்பினும் ரசிகர்களின் கமெண்ட் மற்றும் கேள்விகளுக்கு பதிலும் சொல்லுவார்.
அந்த வகையில், ரசிகர் ஒருவர் ‘நீங்கள் நடித்து வாங்கிய சம்பளத்துக்கு உரிய வருமான வரி செலுத்தி இருக்கிறீர்களா? என்று கேட்டதற்கு, “நான் வ்ரி ஏய்ச்சதில்லை. என்னை பலர் காசு விஷயத்துல ஏய்ச்சியிருக்காங்க. பேசிய ஊதியத்தையே வாங்காம நாமம் போட்டுக்கிட்டதுதான் அதிகம். ‘தமிழ்ப் படம் 2’ வில் காட்டுறாங்களே, வெயிலு மழையில் கஷ்டப்பட்டு பாடி ஆடி கடைசில மூணு ரூபா சம்பளம் அதுபோல தான்.” என்று பதில் அளித்தார்.
தயாரிப்பாளர்களிடம் கஸ்தூரி ஏமாந்த கதையை கேட்டு அவர் மீது பரிதாப்பட்ட நெட்டிசன்கள், கஸ்தூரிக்கு ஆதரவாக டுவிட்டரில் கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...