கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ், வாரம் ஒருவரை வெளியேற்றி வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் யாராக இருபார், என்பதை அறிந்துக் கொள்ள மக்கள் ஆர்வமாக உள்ளனர்.
இந்த வாரம் எலிமினேஷனுக்கு மும்தாஜ், மஹத், ரித்விகா, பொன்னம்பலம், ஷாரிக், பாலாஜி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில், தற்போது புதிய புரொமோ ஒன்று வெளியாகியுள்ளது.
இதில், மும்தாஜ், யாஷிகா, ஐஸ்வர்யா ஆகியோர் கண் கலங்குகிறார்கள். அதேபோல் ஜனனியும் அதிர்ச்சியாகும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.
மேலும், கமல்ஹாசன் அவர்கள் உள்ளே இருக்குறது சிறையும் இல்ல! வெளியே வருவது விடுதலையும் இல்ல, வீட்டில் இருக்கும் புலி இப்போது இங்கே வர இருக்கிறது என்று கூறிகிறார். இதனால் மஹத் இந்த வாரம் வெளியேறுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஆனால் உண்மையில் நிகழ்ச்சியில் இருந்து யார் வெளியேறுகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...