கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் இருந்து ஷாரிக் நேற்று வெளியேற்றப்பட்டார். அவரை அழைத்து செல்வதற்காக அவரது அம்மாவும் நடிகையுமான உமா ரியாஷ் வந்திருந்தார்.
உமாவை மேடைக்கு அழைத்து கமல் பேசும் போது, யாரையும் சார்ந்து இருக்காமல் வாழ கற்றுக்கொள்ளட்டும் என்று நினைத்து தான் ஷாரிக்கை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள அனுப்பி வைத்தேன். நடிகை உமா ரியாஸ் என்பது போய் நான் வெளியே சென்றால் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஷாரிக்கின் அம்மா தானே என்று கூறி பலர் என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது பெருமையாக இருந்தது, என்று உமா பேசினார்.
என் மகனும் நிறைய கற்றுக் கொண்டுள்ளான் என்று உமா கூற, ஷாரிக்கோ சமையல் நல்லா கத்துக்கிடேன். முன்பெல்லாம் சமைக்க தெரியாது, தற்போது சிக்கன் கிரேவி, பிரைட் ரைஸ் செய்யத் தெரியும், என்றார்.
இதற்கிடையே, கமலிடம் வேண்டுகோள் விடுத்த உமா, ஒயில்டு கார்டு எண்ட்ரியா என்னை உள்ளே அனுப்புறீங்களா சார், என்று கேட்க, அதற்கு கமல் வாய்விட்டு சிரித்தார். சத்தியமாக எனக்கு ஒயில்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே போகணும். வச்சு செஞ்சுவிடுவேன் என்று உமா கூறியதை கேட்டு கமல் தலையில் அடித்துக் கொண்டார்.
ஏற்கனவே பலர் பிக் 2 வீட்டிற்குள் ஒயில்ட் கார்டு மூலம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் அந்த லிஸ்டில் தற்போது உமாவும் சேர்ந்திருக்கிறார். உமாவின் கோரிக்கையை ஏற்று கமல் அவரை பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பினால், பிக் பாஸ் வீடே ரணகளாவது உறுதி.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...