பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ‘சீமராஜா’ விரைவில் வெளியாக உள்ள நிலையில், சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிகப்பெரிய வெற்றிப் பெற்றதோடு, பாடல்களும் மிகப்பெரிய ஹிட் ஆகியுள்ளது.
‘சீமராஜா’ படத்தை தொடர்ந்து ரவிக்குமார் இயக்கத்தில் அறிவியல் சம்மந்தமான படம் ஒன்றில் நடிக்கும் சிவகார்த்திகேயன், எம்.ராஜேஷ் இயக்கத்தில் காமெடி கலந்த காதல் படத்தில் நடிக்கிறார். இதில் ஹீரோயினாக நயந்தாரா நடிக்கிறார். ஸ்டுடியோ க்ரீன் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா இப்படத்தை தயாரிக்கிறார்.
இந்த நிலையில், இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஹிப் ஹாப் தமிழா ஆதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் சிவகார்த்திகேயன் படத்திற்கு ஆதி முதல் முறையாக இசையமைக்கிறார்.
இது குறித்து தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறுகையில், “இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு இப்பொழுது முழுமை பெற்றுவிட்டது என சொல்லலாம். இன்றைய இளைஞர்களின் நாடி துடிப்பை அறிந்த ஒரு இசையமைப்பாளர் வேண்டும், என தீவிரமாக இருந்தோம். அந்த தீவிரமே எங்களை ஹிப் ஹாப் ஆதியை ஒப்பந்தம் செய்ய வைத்தது. ஒரு பிரபல இசையமைப்பாளராக, ஒரு வெற்றிப்பட நாயகனாக வலம் வரும் ஹிப் ஹாப் ஆதி இதற்காக நேரம் ஒதுக்குவாரோ என்ற சந்தேகம் எழுந்தாலும் அவரை நம்பிக்கையோடு அணுகினோம். கதையை கேட்ட உடனே ஒப்பு கொண்டதற்கு அவருக்கு நன்றி.
சிவகார்த்திகேயன் நயந்தாரா ஜோடிக்கு குடும்பத்தோடு படம் பார்க்கும் ரசிகர்கள் ஆதரவு அதிகம். அவர்களுக்கும் ஹிப் ஹாப் ஆதியை பிடிக்கும் என்பதால் இந்த கூட்டணியின் வெற்றி நிச்சயம் பெரிசாக இருக்கும்.” என்றார்.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...