‘விவேகம்’ வெளியாக உள்ள நாள் அஜித் ரசிகர்களுக்கு பண்டிகை என்றாலும், அதே நாள் அவர்கள் கஷ்ட்டப்படும் நாளாகவும் அமைந்துவிட்டது.
அஜித்தின் படத்தை முதல் நாளே, முதல் காட்சியே பார்க்க வேண்டும், என்ற ரசிகர்களின் தீரா ஆசையை பயன்படுத்திக் கொள்ளும் திரையரங்க உரிமையாளர்கள், முதல் நாளன்று டிக்கெட் விலையை ரூ.1000 முதல் ரூ.1500 வரை விற்பனை செய்கிறார்கள்.
இந்த பகல் கொள்ளை அனைத்து முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸின் போதும் நடைபெறும் ஒன்று தான் என்றாலும், அஜித் போன்ற நேர்மையான நடிகரின் படம் ரிலீசாகும் போது நடைபெறுவது அவரது ரசிகர் அல்லாத பொது மக்களையும் வருத்தமடைய செய்கிறது.
100 முதல் 300 ரூபாய் விற்பனை செய்தால் கூட பரவாயில்லை, இப்படி அநியாயத்துக்கு 1000 முதல் 1500 ரூபாய்க்கு விற்கிறார்களே, என்று ரசிகர்கள் புலம்பினாலும், அஜித்தின் மீது உள்ள தீவிர வெறியால், கேட்கும் தொகையை கொடுத்து டிக்கெட்டை வாங்கிச் செல்கின்றனர்.
எது எப்படியோ, ‘விவேகம்’ படம் ரசிகர்களின் இந்த புலம்பலை புறம் தள்ளும் அளவுக்கு உண்மையாகவே அவர்களின் கொண்டாட்டமாகவே இருக்கும் என்பது திரையுலகின் படம் குறித்து பேசும் போதே தெரிகிறது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...