Latest News :

’நாயகி’ சீரியலில் இருந்து விலகிய விஜயலஷ்மி!
Tuesday August-07 2018

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் முக்கியமான சீரியல் ‘நாயகி’. நடிகைகள் அம்பிகா, ‘சென்னை 600028’ விஜயலஷ்மி ஆகியோர் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். நாயகி என்ற டைட்டில் கதாபாத்திரமாக ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் விஜயலஷ்மி நடித்து வருகிறார்.

 

ரசிகர்களிடம் பெரும் பிரபலமடைந்துள்ள இந்த சீரியலில் இருந்து விஜயலஷ்மி திடீரென்று விலகியுள்ளார்.

 

“தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த சீரியலில் இருந்து நான் விலகுகிறேன். தங்கள் ஆதரவுக்கு நன்றி” என்று சமூக வலைதள பக்கத்தில் விஜயலஷ்மி தெரிவித்துள்ளார். ஆனால், விலகுவதற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை.

 

அதே சமயம், வேறு ஒரு சீரியல் மூலம் ரசிகர்களை விரைவில் அவர் சந்திப்பதாக சூசகமாக தெரிவித்திருக்கிறார்.

 

சீரியல்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் திடீரென்று விலகுவதும், அவர்களுக்கு பதில் இனி இவர் நடிப்பார், என்று சொல்லிவிட்டு வேறு ஒருவரை நடிக்க வைப்பது என்பது சகஜமான ஒன்று தான் என்றாலும், சீரியலின் முக்கிய வேடமான நாயகியாக நடித்துக் கொண்டிருப்பவர் திடீரென்று விலகுவதும், அவருக்கு பதில் அந்த கதாபாத்திரத்தில் வேறு ஒருவர் நடிப்பது என்பதும், மக்களிடம் அந்த சீரியலுக்கு இருந்த மவுசை குறைத்துவிடும் என்பது தான் உண்மை.

 

அந்த வகையில் ‘நாயகி’ தொடரில் இருந்து விலகியுள்ள தொடர் நாயகி விஜயலஷ்மிக்கு பதில் யார் அந்த வேடத்தில் நடிக்க போகிறார், அவரால் சீரியல் தொடர்ந்து நல்லபடியாக நகர்கிறதா, என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related News

3200

”கண்டிப்பாக உங்களை இந்த நிகழ்வு ஆச்சரியப்படுத்தும்” - உறுதியளித்த பிரபுதேவா
Sunday January-12 2025

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...

”பெண்கள் இல்லாமல், நம் உலகம் இல்லை” - நடிகர் ஜெயம் ரவி உருக்கம்
Saturday January-11 2025

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...

Recent Gallery