இந்திய கிரிக்கெட் அணியின் முன்னால் கேப்டன் டோனியின் வாழ்க்கை திரைப்படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதேபோல், இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கை திரைப்படமும் மிகப்பெரிய வசூலை ஈட்டியது. இதனால் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க பலர் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில், இந்திய பேட்மிண்டன் வீராஙகனை பி.வி.சிந்து, சாய்னா நோவல், கிரிக்கெட் வீரர் கபில் தேவ், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆகியோரது வாழ்க்கையும் திரைப்படமாக உருவாக உள்ளது.
இதில் சானியார் மிர்சாவின் வாழ்க்கை திரைப்படத்தில் அவரது வேடத்தில் டாப்ஸியை நடிக்க வைக்க ஆலோசிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சானியா மிர்சாவையே நடிக்க வைக்க இயக்குநர் முடிவு செய்திருக்கிறாராம்.
இது குறித்து சானியா மிர்சாவிடம் தெரிவிக்க அவரும் சம்மதம் தெரிவித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...