‘துள்ளுவதோ இளமை’, ‘காதல் கொண்டேன்’, ‘யாரடி நீ மோகினி’, ‘திருவிளையாடல் ஆரம்பம்’, ‘3’ ஆகியப் படங்களை தயாரித்த ஆர்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தற்போது தயாரிக்கும் படம் ’பாண்டிமுனி’.
கஸ்தூரிராஜா இயக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் அகோரி வேடத்தில் நடிக்கிறார். ஹீரோவாக ஆசிப் என்ற மாடல் அறிமுகமாக ஹீரோயின்களாக மேகாலி, ஜோதி, வைஷ்ணவி, யாஷிகா ஆகியோர் அறிமுகமாகிறார்கள். முக்கிய வேடத்தில் ஷாயாஜி ஷிண்டே நடிக்கிறார். இன்னும் சில முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்க இருக்கிறார்கள்.
மது அம்பட் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஸ்ரீ காந்த்தேவா இசையமைக்க, ஸ்ரீமான் பாலாஜி கலையை நிர்மாணிக்கிறார். சிவங்கர் நடனம் அமைக்க, சூப்பர் சுப்பராயண் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். சுரேஷ் அர்ஸ் எடிட்டிங் செய்கிறார்.
பயங்கரமான ஹாரர் படமாக உருவாகும் இப்படத்தின் கதை, சுமார் 70 வருடங்களுக்கு முன்னால் காட்டுப் பகுதி அரண்மனை ஒன்றில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது. படப்பிடிப்பு கோத்தகிரியில் நடைபெற்ற போது ஆச்சர்யமான சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது.
பனகுடிசோலை என்கிற இடத்தில் அப்பகுதி மக்கள் தங்களது இஷ்ட கடவுளாக வணங்கும் குட்டஞ்சாமி என்கிற கோயில் இருக்கிறதாம். இந்த கோயிலுக்கு சுமார் 700 வருடங்களாவதாகவும், சிலர் 1000 வருடன் பழமையான கோவில் என்றும் கூறுகிறார்கள். பஞ்ச பாண்டவர்கள் கூட இந்த கோயிலுக்கு வந்து சென்றதாக கூறப்படுகிறது.
குகைக்கோயில் மாதிரியான அந்த இடத்தில் ‘பாண்டிமுனி’ படக்குழு படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருந்த போது, அந்த ஊர் மக்கள், கோயிலுக்குள் பெண்கள் செல்லக்கூடாது என்றும், செருப்பு அணியக்கூடாது என்றும் கூறியிருக்கிறார்கள். அவர்களிடம் வருத்தம் தெரிவித்த படக்குழுவினர் அங்கிருந்து திரும்பி வந்துவிட்டார்களாம். பிறகு, மறுநாள் அந்த இடத்திற்கு அருகில் படப்பிடிப்பை நடத்திய போது, திடீரென்று நடிகை மேகா, சாமிவந்து ஆடியிருக்கிறார். அவரது ஆக்ரோஷமான ஆட்டத்தைப் பார்த்து படக்குழு பயத்தில் உரைந்து போய்விட்டார்களாம். ஊர்காரர்கள் ஒன்று கூடி பரிகார பூஜை செய்த பிகே மேகாலியின் சாமியாட்டம் நின்றதாம்.
இப்படி வித்தியாசமான அனுபவத்தோடும், பல அதிர்ச்சியான விஷயங்களோடும் படப்பிடிப்பை நடத்தியவர்கள், பார்ப்பதே அபூர்வமான குறிஞ்சிப் பூ நிறைந்த இடத்திலும் படப்பிடிப்பு நடத்தியுள்ளார்கள். அந்த அழகிய கண்கொள்ளா காட்சியை கேமராவிலும் பதிவு செய்துள்ளார்கள்.
இதற்கு மேலாக ஒரு அதிசயமான அனுபவ இந்த படக்குழுவினருக்கு கிடைத்திருக்கிறது. பனகுடிசோலை குட்டஞ்சாமி கோயில் மேல் ஹெலிகேம் பறக்கவில்லையாம். கோயிலை சுற்று உள்ள இடங்களில் பறந்த ஹெலிகேம், கோயில் மேல் பறக்காதது ஏன்? என்பதை அறியாத படக்குழு இன்னமும் அந்த ஆச்சரியத்தில் இருந்து வெளிவரவில்லையாம்.
இப்படி பல விதமான ஆச்சர்யங்கள் மற்றும் அபூர்வமான விஷயங்களை சந்தித்தவாறு முதல் கட்டப்படப்பிடிப்பை முடித்திருக்கும் ‘பாண்டிமுனி’ படக்குழு அடுத்த கட்டப்படப்பிடிப்பில் அகோரி கெட்டப்பில் நடிக்க இருக்கும் ஜாக்கி ஷெராப்புடன் இணைகிறார்களாம்.
அப்போது எந்த மாதிரியான அதிர்ச்சியை எதிர்கொள்ளப் போகிறார்களோ!
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...