சிவா இயக்கத்தில் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் நடிக்கும் படம் ‘விஸ்வாசம்’. இதற்கு முன்னதாக சிவா - அஜித் கூட்டணியில் வெளியான ‘விவேகம்’ எதிர்ப்பார்த்த வெற்றி பெறவில்லை என்பதோடு, மீண்டும் சிவா உடன் அஜித் இணைந்திருப்பது அவரது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.
இருந்தாலும், இந்த முறை ரசிகர்களை ஏமாற்றிவிட கூடாது என்பதில் அஜித்தும், சிவாவும் ரொம்ப தீர்க்கமாக இருப்பதோடு, ‘விஸ்வாசம்’ படத்தை முழுக்க முழுக்க ரசிகர்களுக்கான படமாகவே எடுத்து வருகிறார்கள். அதனால் தான், ரசிகர்களுக்கு பிடித்த நயந்தாராவை ஹீரோயினாக்கியதோடு, யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமைய்யா, விவேக், கோவை சரளா என காமெடிக்காகவே பல நடிகர்கள் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.
இதற்கிடையே அஜித் சம்மந்தப்பட்ட சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில், வழக்கம் போல அஜித் டூப் போடாமல் ஆக்ஷன் காட்சிகளில் ஈடுபடுகிறாராம்.
ஆக்ஷன் இயக்குநர் திலீப் சுப்பராயண், இயக்குநர் சிவா உள்ளிட்ட படக்குழுவினர் எவ்வளவு சொல்லியும் கேட்காத அஜித், டூப்பை தவிர்த்துவிட்டு தானே சண்டைக்காட்சிகளில் ஈடுபட்டு வருவதால், அவருக்கு ஏதாவது அடிபட்டு விடுமோ என்று படக்குழுவினர் கவலை அடைந்திருப்பதோடு, இந்த தகவலால் அவரது ரசிகர்களும் கவலையில் உள்ளார்களாம்.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...