திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி, இன்று சற்று நேரத்திற்கு முன்பாக சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார்.
வயது முதிர்வு காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்டு கடந்த 11 நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவரும், முன்னால் முதல்வருமான மு.கருணாநிதியின் உடல் நிலை நேற்று இரவு முதல் கவலைக்கிடமாக இருந்தது.
இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதிலும், அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
இந்த நிலையில், கருணாநிதி இன்று சற்று நேரத்திற்கு முன்பாக 6.10 மணிக்கு உயிரிழந்துவிட்டதாக காவேரி மருத்துவமனை அறிவித்துள்ளது.
பெரிய அளவில் பல விதமான தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் கருணாநிதியை காப்பாற்ற முடியவில்லை. தமிழகத்தின் மாபெரும் தலைவரை இழந்துவிட்டோம், என்று காவேரி மருத்துவமனை அறிவித்துள்ளது.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...