சிவானி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சுபா செந்தில் தயாரித்துள்ள படம் ‘கார்கில்’. ஜிஷ்னு என்ற அறிமுக நாயகன் நடித்துள்ள இப்படத்தின் கதை, திரைகக்தை, வசனம் எழுதி சிவானி செந்தில் இயக்கியுள்ளார்.
சென்னையில் இருந்து பெங்களூர்க்கு காரில் போகும் ஹீரோவுக்கு, காதலியுடன் சின்ன விரிசல், அந்த விரிசலே கார்கில் போராக மாற, அந்த போரில் ஹீரோ எப்படி போராடி வெற்றி பெற்றார், என்பதே படத்தின் கதை.
வழக்கமாக படமாக அல்லாமல் புதிய முயற்சியாக சிவானி செந்தில் இயக்கியுள்ள இப்படத்தில் ஒற்றை நடிகன் மட்டுமே திரையில் தோன்றுவாராம். மிக குறைந்த பட்ஜெட்டில் தரமான படைப்பாக உருவாகியுள்ள இந்த ‘கார்கில்’ வித்தியாசமான படைப்புகளை வரவேற்க்கும் ரசிகர்களை நிச்சயம் கவரும், என்று நம்பிக்கை தெரிவித்த சிவானி, கதையின் நாயகனாக அறிமுகமாகியுள்ள ஜிஷ்னுவின் அர்ப்பணிப்பு, தமிழ் சினிமாவில் அவருக்கு நிலையான இடத்தை பெற்று தரும். அதேபோல், இப்படத்தில் பணிபுரிந்த அனைத்து அறிமுக தொழில்நுட்ப கலைஞர்களும் இப்படத்திற்கு பிறகு தமிழ் திரையுலகில் மிக உயரத்திற்கு செல்வார்கள் என்பது உறுதி, என்று கூறினார்.
விக்னேஷ் பாய் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கணேஷ் பரமஹம்ஸா ஒளிப்பதிவு செய்ய, பாரி இளவழகன், தர்மா ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். அபிநாத் எடிட்டிங் செய்ய, மக்கள் தொடர்பு பணியை செல்வரகு கவனிக்கிறார்.
இப்படத்தின் முழு படப்பிடிப்பும் இரண்டு பாடல் காட்சியும், சென்னை தொடங்கி பெங்களூர் எலெக்ட்ரானிக்ஸ் சிட்டி ஆகிய பகுதிகளில் மிக குறைந்த நாட்களில் படமாக்கப்பட்டுள்ளது.
அனைத்து பணிகளும் முடிவடைந்து திரைக்கு வர தயாராக உள்ள இப்படத்தின் பாடல்களை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு நேற்று வெளியிட்டார்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...