‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் ஒட்டு மொத்த தமிழர்களின் ஆதரவை பெற்றுள்ள நடிகை ஓவியாவைப் பார்க்க ரசிகர்கள் பலர் ஆவலோடு இருக்க, அந்த ஆவலை பூர்த்தி செய்யும் விதத்தில் அவர் நடித்த படம் ஒன்று விரைவில் திரைக்கு வர உள்ளது.
வேலம்மாள் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் மதுரை ஆர்.செல்வம் தயாரித்துள்ள படம் ’ஓவியாவை விட்டா யாரு? - சீனி’. ஆரம்பத்தில் சீனி என்ற தலைப்போடு உருவான இப்படத்தின் தலைப்பு தற்போது ‘ஓவியா’ என்று மாற்றப்பட்டுள்ளது.
’பிக் பாஸ்’ ஓவியா என்று அழைக்கப்படும் ஓவியா, இப்படத்தின் ரிலிசிற்கு பிறகு ‘பிக் மாஸ்’ ஓவியாவாக்ல மாறிவிடுவாராம். அந்த அளவுக்கு படத்தில் அவரது கதாபாத்திரம் அமைந்திருக்கும். அதேபோல், இப்படத்தில் சீதா என்ற யானை ஒன்று ஓவியாவின் தோழியாக நடித்திருப்பதோடு, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற சினேகன், வைபாபுரி, கஞ்சா கருப்பு என மேலும் மூன்று பேரும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.
ஆக, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றவர்கள் நடித்த முதல் திரைப்படம் என்றால் அது இந்த ‘ஓவியாவை விட்டா யாரு’ படமாகத்தான் இருக்கும்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம், அவரது கேரக்டரை பார்த்து பலர் அவருக்கு ரசிகர்களானாலும், சிலர் அவர் நடிப்பதாக விமர்சித்தனர். ஆனால், உண்மையில் ஓவியாவின் கேரக்டர் அப்படித்தான், அவர் நடிக்க மாட்டார். ரொம்ப நல்ல பெண், என்று இப்படத்தின் தயாரிப்பாளர் மதுரை ஆர்.செல்வம் பாராட்டு பத்திரம் வழங்கியுள்ளார்.
நேற்று சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் மதுரை ஆர்.செல்வம், இப்படத்தால் தான் பட்ட துன்பங்கள் பற்றி கூறி கண்ணீர் வீட்டார். தொடர்ந்து பேசியவர் “படத்தை இயக்கிய இயக்குநர் உள்ளிட்ட பலர் எனக்கு பலவிதத்தில் தொல்லை கொடுத்தாலும், எனக்கு ஆதரவாக இருந்து பெரும் ஒத்துழைப்பு கொடுத்து படத்தை நல்லபடியாக முடித்துக்கொடுத்தவர் ஓவியா தான். அந்த பெண் எங்கிருந்தாலும் நல்லா இருக்கணும். இந்த படத்திற்காக 47 நாட்கள் நடித்த ஓவியா, என்ன அண்ணா...அண்ணா..என்று அன்பாக அழைத்து, ”பாத்துண்ணா...ஜாக்கிரதையா இருங்க...” என்று அட்வைஸ் செய்தார். பல பிரச்சினைகளை என் படம் சந்தித்து வந்த நிலையில், தற்போது என் படத்திற்கு எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருப்பதற்கும் ஓவியா தான் காரணம். அவரால் இந்த நிகழ்வில் கலந்துக் கொள்ள முடியவில்லை என்றாலும், படம் ரிலிஸின் போது அவர் எங்களோடு சேர்ந்து புரோமோஷன் பணிகளில் ஈடுபடுவார்.” என்று தெரிவித்தார்.
ஓவியாவுடன் புதுமுகம் சஞ்சீவி ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் காமெடி வேடத்தில் பரத் என்ற இளைஞர் அறிமுகமாகிறார். மற்றும் ராதாரவி, செந்தில், சரவணன், மனோஜ் கிருஷ்ணா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
படித்த இளைஞர்கள் தங்களது உழைப்பை நம்பாமல், அதிஷ்ட்டத்தை நம்புவதால் ஏற்படும் ஏமாற்றத்தை, கருவாக வைத்து நல்ல மெசஜை கமர்ஷியலாக சொல்லியிருக்கும் இந்த ‘ஓவியாவ விட்டா யாரு’ சின்னத்திரையில் ‘பிக் பாஸ்’ ஆக இருக்கும் ஓவியாவை, வெள்ளித்திரையில் ‘பிக் மாஸ்’ ஆக மாற்றும் என்பது நிச்சயம் என்று நம்பிக்கையோடு கூறுகின்றனர் இப்படத்தை பார்த்த திரையுலகினர்கள்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...