கமல்ஹாசன் இயக்கி நடித்திருக்கும் ‘விஸ்வரூபம் 2’ ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் மீது ரசிகர்களுக்கு எந்த வித எதிர்ப்பார்ப்பும் ஏற்படவில்லை. சில எதிர்ப்புகளால் விஸ்வரூபம் முதல் பாகம் தமிழகம் மட்டும் இன்றி இந்தியா முழுவதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் தற்போது வெளியாக உள்ள ‘விஸ்வரூபம் 2’ குறித்து மக்கள் எந்த ஆர்வமும் காட்டவில்லை.
இதற்கிடையே, டிரைலர், சிங்கிள் பாடல் தற்போது மேக்கிங் வீடியோ என்று கமல்ஹாசன் வெளியிட்டாலும், அவர் படத்தின் புரோமோஷன் பணிகளிலும் முழுமையாக ஈடுபடவில்லை. இதுவரை ‘விஸ்வரூபம் 2’ குறித்து முழுமையான பத்திரிகையாளர் சந்திப்பு கூட கமல் நடத்தவில்லை.
தற்பொது தனது மக்கள் நீதி மய்யம் கட்சி தொடர்பான பணியில் இருப்பதாலும், இந்தியன் 2 குறித்த சிந்தனையில் இருப்பதாலும் அவர் விஸ்வரூபம் 2 படத்தை பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை. காரணம் முதல் பாகம் எடுக்கப்பட்ட போதே, இரண்டாம் பாகத்தின் பல காட்சிகள் எடுக்கப்பட்டதால், இரண்டாம் பாகத்திற்கான செலவு என்பது மிக குறைவு தான். அதனால், இந்த படம் ஓடினாலும் ஓடாவிட்டாலும் கமலுக்கு இழப்பு என்பது எதுவும் ஏற்படாது என்பதால், அவர் இந்த படத்தின் புரோமோஷன் வேலைகளில் தீவிரம் காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...