Latest News :

பிரபல நடிகை சுட்டுக் கொலை! - புகைப்படம் உள்ளே
Thursday August-09 2018

சினிமா நடிகைகள் அவ்வபோது சில சர்ச்சையான விஷயங்களில் சிக்குவதும், தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களும் அதிகரித்து வரும் நிலையில், தற்போது சில நடிகைகள் கொலை செய்யப்படும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.

 

அதிலும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இதுபோன்ற கொலை சம்பவம் அதிகமக நடக்கிறது. பாகிஸ்தானின் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 15 நடிகைகள் கொல்லப்பட்டு இருப்பதாக ரிப்போர்ட் ஒன்று தெரிவிக்கிறது.

 

இந்த நிலையில், பாகிஸ்தானின் பிரபல பாடகியும் நடிகையுமான ரேஷ்மா என்பவர் அவரது கணவரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

 

பாகிஸ்தானின் பக்துங்குவா மாகாணத்தை சேர்ந்த ரேஷ்மா, பிரபலமான பாடகியாக இருப்பதோடு, பல நாடகங்களிலும் நடித்து வருகிறார். 

 

Actress Reshma

 

தனது கணவரை பிரிந்து தனது சகோதரருடன் இஸ்லாமாபாத்தில் வசித்து வரும் ரேஷ்மாவை சமீபத்தில் சந்திக்க வந்த அவரது கணவர் அவருடன் சண்டை போட்டுள்ளார். சிறிது நேரத்தில் இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் முற்றிப்போக, அப்போது அவரது கணவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் ரேஷ்மாவை சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டார். இதில் ரேஷ்மா சம்பவ உடத்திலேயே உயிரிழந்தார்.

 

 

இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், தப்பியோடியவருக்கு ரேஷ்மா நான்காவது மனைவி என்று கூறியுள்ளனர்.

Related News

3224

”கண்டிப்பாக உங்களை இந்த நிகழ்வு ஆச்சரியப்படுத்தும்” - உறுதியளித்த பிரபுதேவா
Sunday January-12 2025

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...

”பெண்கள் இல்லாமல், நம் உலகம் இல்லை” - நடிகர் ஜெயம் ரவி உருக்கம்
Saturday January-11 2025

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...

Recent Gallery