Latest News :

’புதுப்பேட்டை 2’ வில் நடிக்கிறாரா சூர்யா?
Thursday August-09 2018

தனுஷ் நடிப்பில், செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான படம் ’புதுப்பேட்டை’. ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற இப்படம் தனுஷ் நடித்த படங்களில் முக்கியமான படமாகும். 

 

இதற்கிடையே இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ‘புதுப்பேட்டை 2’ என்ற தலைப்பில் 2017 ஆம் ஆண்டே செல்வராகவன் தனுஷை வைத்து எடுப்பதாக இருந்த நிலையில், அந்த முயற்சி திடீரென்று கைவிடப்பட்டு விட்டது.

 

தற்போது சூர்யாவை வைத்து செல்வராகவன் இயக்கும் ‘என்.ஜி.கே’ தான் புதுப்பேட்டை இரண்டாம் பாகம் என்று தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதற்கு ஏற்றவாறு என்.ஜி.கே படமும் அரசியல் திரில்லர் படமாக உருவாகி வருகிறது. இதில் சூர்யா எம்.எல்.ஏ கதாபாத்திரத்திலும் நடிப்பதோடு, ஒரு கட்சியின் இளைஞரணி தலைவராகவும் இருக்கிறாராம்.

 

புதுப்பேட்டையில் தனுஷ் ஒரு அரசியல் கட்சியில் முக்கிய பொறுப்பில் சேருவது போல படம் முடிவடையும் என்பதால், அதன் தொடர்ச்சியாக தான் இந்த ‘என்.ஜி.கே’ படத்தை செல்வராகவன் இயக்கி வருவதாக கூறப்படுகிறது. இதுவரை அரசியல் படங்களில் சூர்யா நடிக்காத நிலையில் அவரது முதல் அரசியல் படம் என்பதால், இதை புதுப்பேட்டை இரண்டாம் பாகம் என்று கூறினால் எடுபடாமல் போய்விடும் என்பதால், புதிய படமாக இப்படத்தை அறிவித்திருக்கிறார்களாம்.

 

ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றாலும், ‘என்.ஜி.கே’ வெளியானால் தெரியும் இது புதுப்பேட்டையின் இரண்டாம் பாகமா அல்லது செல்வராகவனின் புதிய கதையா, என்று.

 

பொறுத்திருந்து பார்ப்போம்.

Related News

3227

”கண்டிப்பாக உங்களை இந்த நிகழ்வு ஆச்சரியப்படுத்தும்” - உறுதியளித்த பிரபுதேவா
Sunday January-12 2025

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...

”பெண்கள் இல்லாமல், நம் உலகம் இல்லை” - நடிகர் ஜெயம் ரவி உருக்கம்
Saturday January-11 2025

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...

Recent Gallery