அஜித்தின் ‘விவேகம்’ இன்று உலகம் முழுவதும் சுமார் 3500 திரையரங்கங்களில் வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள சில திரையரங்குகளில் அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டுள்ள நிலையில், எப்போதும் போல அஜித் ரசிகர்கள் ‘விவேகம்’ படத்தின் ரிலீஸை பட்டாசு மற்றும் பால் அபிஷேகத்துடன் நின்றுவிடாமல், 57 கிலோ அஜித் இடலி உள்ளிட்ட வெவ்வேறு வகையில் கொண்டாடி வருகிறார்கள்.
அஜித்தின் ரசிகர்களின் இந்த உற்சாக கொண்டாட்டத்தை தனது படத்தில் காட்சியாக்க திட்டமிட்டுள்ள இயக்குநர் பாலாஜி தரணிதரன், தற்போது சென்னையில் உள்ள பிரபல திரையரங்கம் ஒன்றில் முகாமிட்டுள்ளார்.
’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் மூலம் கோலிவுட்டின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான பாலாஜி தரணிதரன், இரண்டாவதாக ‘ஒரு பக்க கதை’ என்ற படத்தை இயக்கினார். இப்படம் ரிலிஸுக்கு தயாராக உள்ள நிலையில் மூன்றாவது படத்தை தொடங்கியுள்ளார். இப்படத்தில் தான், அஜித் ரசிகர்களின் கொண்டாட்டத்தை காட்சிப் படுத்த திட்டமிட்ட அவர், தற்போது ‘விவேகம்’ படத்தின் ரிலிஸிற்காக கூடியிருக்கும் அஜித் ரசிகர்கள் கூட்டத்தையும், அவர்களின் கொண்டாட்டத்தையும், சென்னை காசி திரையரங்கில் லைவாக படம் பிடித்துக் கொண்டிருக்கிறார்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...