கமல்ஹாசன் இயக்கி நடித்திருக்கும் ‘விஸ்வருபம் 2’ இன்று (ஆகஸ் 10) வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகளிலும் படக்குழுவினர் ஈடுபட்டு வந்த நிலையில், படத்திற்கு எதிராக பிரமிட் சாய்மீரா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
மனுவில் தங்களிடம் ’மர்மயோகி’ படத்திற்காக பணம் வாங்கிய கமல்ஹாசன், அதை வேறு படத்திற்கு பயன்படுத்தி விட்டதாகவும், எனவே அந்த பணத்தை திருப்பி தரும் வரை ‘விஸ்வரூபம் 2’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும், என்று கோரியிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ததை தொடர்ந்து, ‘விஸ்வரூபம் 2’ இன்று வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், சென்னையில் உள்ளிட்ட சில இடங்களில் ‘விஸ்வரூபம் 2’ வெளியானாலும் கடலூர், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், தேனி மற்றும் புதுச்சேரியில் படம் வெளியாகவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் இடையே உடன்பாடு ஏற்படாததால் அந்த மாவட்டங்களில் ‘விஸ்வரூபம் 2’ இன்னும் வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...