தமிழகம் மட்டும் இன்றி இந்தியாவின் பல மாநிலங்களில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புகளோடு வெளியாகியிருக்கும் அஜித்தின் ‘விவேகம்’ படம் இன்று சென்னையின் சில திரையரங்குகளில் அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்டது.
மதுரையில், அதிகாலை 2 மணிக்கே முதல் காட்சி போடப்பட்டதாக கூறப்படுகிறது. இதுபோன்ற சிறப்பு காட்சிகளுக்கான டிக்கெட் விலை ரூ.1000 முதல் 1500 வரை நிர்ணயிக்கப்பட்டாலும், ரசிகர்கள் புலம்பியபடியே டிக்கெட் வாங்கி, அஜித்தின் ‘விவேகம்’ படத்தை கொண்டாடி வருகிறார்கள்.
இன்று அதிகாலை திரையிடப்பட்ட காட்சி முடிந்த பிறகு ரசிகர்களிடம், படம் எப்படி? என்று விசாரிக்கையில், “எதிர்ப்பார்த்த அளவுக்கு இல்லை” என்று ஒருவர் கூற, ரசிகர்களோ “ஒரு முறை பார்க்கலாம்” என்று கூறுகிறார்கள்.
பொதுவாக ரசிகர்கள் தங்களது ஹீரோவின் படம் சுமார் என்றாலும் அதை சூப்பராக எடுத்துக் கொல்வது தான் வழக்கம். ஆனால், அதிகாலை 4 மணி சிறப்பு காட்சியில் படம் பார்த்த ரசிகர்களே “சுமார்”, ஒரு முறை ”பார்க்கலாம்” என்று படம் குறித்து கூறும்போது, ரசிகர் அல்லாத ஆடியன்ஸ் படம் குறித்து என்ன கூறுவார்களோ!
இதை வைத்து பார்க்கும் போது, பெரிய எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்திய ‘விவேகம்’, அதே பெரிய அளவில் ரசிகர்களை ஏமாற்றிவிட்டதோ! என்று நினைக்க தோன்றுகிறது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...