கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு போல தற்போது கேரளாவில் பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் அம்மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பியுள்ளதால், பல அணைகள் ஒரே சமயத்தில் திறக்கப்பட்டுள்ளது.
பல பகுதிகள் வெள்ளத்தில் மிதப்போடு, பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் இடிந்து நாசமாயி உள்ளன. ராணுவம், பேரிடர் மீட்பு குழுவினர் என மக்களை காப்பாற்றுவதில் பல ஈடுபட்டுள்ள நிலையில், கேரள முதல்வர் பல்வேறு தரப்பினரிடம் நிதி கேட்டிருக்கிறார்.
இதையடுத்து, நடிகர்கள் சூர்யா, கார்த்தி, கமல்ஹாசன், தென்னிந்திய நடிகர்கள் சங்கம் ஆகியோர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் கேரளாவுக்கு நிதி வழங்கி உள்ளனர். அதேபோல் பல மாநிலத்தை சேர்ந்த நடிகர், நடிகைகள் கேரளாவுக்கு உதவிகள் செய்ய முன் வந்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோவான விஜய் தேவரகொண்டா கேரளாவுக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...
வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி ஆகியோரது நடிப்பில், ஆர்...
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...