’ஜூலி 2’ மூலம் பாலிவுட்டுக்கு பறந்த ராய் லட்சுமி, அப்படம் எதிர்ப்பார்த்த வெற்றி பெறாததால் மீண்டும் கோலிவுட்டுகே திரும்பி வந்திருக்கிறார். அஞ்சலியுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க இருக்கும் ராய் லட்சுமி, அடுத்ததாக பேண்டஸி ஹாரர் திரில்லர் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
‘சிண்ட்ரல்லா’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் வினோ வெங்கடேஷ் இயக்குகிறார். இவர் எஸ்.ஜே.சூர்யாவின் மாணவர் ஆவார்.
இப்படத்தை தயாரிக்கும் எஸ்.எஸ்.ஐ புரொடக்ஷன்ஸ் திரையரங்கம் நடத்தி வருவதோடு, 100 க்கும் மேற்பட்ட திரைப்படங்களை விநியோகம் செய்தும் இருக்கிறார்கள்.
படம் குறித்து கூறிய இயக்குநர் வினோ வெங்கடேஷ், “இது வழக்கமான ஹாரர் காமெடி படமல்ல. பார்க்க புதுசாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து ரசிக்கும் படமாக இருக்கும். படம் பற்றி பேச ஆரம்பித்ததுமே தலைப்பு தான் எல்லாருக்கும் பிடித்தது. அதன் மீது ஈர்ப்பு வந்தது. தயாரிப்பாளர் தயாரிக்க முன் வந்தார். அவரும் தலைப்பு பிடித்து தான் கதை கேட்டார். நடிகை ராய் லட்சுமிக்கு படம் பற்றிய குறிப்புகளை அனுப்பினோம். பிறகு படப்பிடிப்பில் இருந்து அவரை மதிய உணவு இடைவேளையில் தான் போய்ப் பார்த்தோம். சாப்பிடாமல் அரை மணி நேரம் கதை கேட்டார். நாங்கள் அனுப்பியிருந்த கதைச் சுருக்கம், குறிப்புகளைப் பார்த்துவிட்டு ஏற்கனவே ஓர் இணக்கமான புரிதலோடுதான் இருந்தார். கதையை கேட்டுவிட்டு சம்மதம் கூறினார். மேலும் ஒரு வார அவகாசத்தில் சில விளக்கங்கள் கேட்டார். தெளிவு பெற்றார். இப்போது முழுமையாக ‘சிண்ட்ரல்லா’ வுக்குள் புகுந்து விட்டார்.” என்றார்.
இப்படத்தின் ஆரம்பக் கட்டப்பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...