மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதி சமாதியில்ன் இன்று அதிகாலை 4 மணிக்கு நடிகர் விஜய் அஞ்சலி செலுத்தினார்.
கடந்த 7 ஆம் தேதி மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என ஏராளமானோர் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், கருணாநிதி மறைவின் போது அமெரிக்காவில் ‘சர்கார்’ படப்பிடிப்பில் கலந்துக்கொண்டிருந்த நடிகர் விஜய், அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்கவில்லை. அதே சமயம், கருணாநிதி மறைவு செய்தியை அறிந்து அன்றைய தினம் அமெரிக்காவில் சர்கார் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
தற்போது படப்பிடிப்பு முடிந்து அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பியுள்ள விஜய், சென்னை விமான நிலையத்தில் இருந்து நேராக மெரீனாவுக்கு வந்து சுமார் அதிகாலை 4 மணிக்கு கருணாநிதியின் சமாதியில் மரியாதை செலுத்தினார்.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...