டாலிவுட்டை தனது செக்ஸ் புகார் மூலம் கலங்கடித்த நடிகை ஸ்ரீரெட்டி, தற்போது கோலிவுட்டில் முகாமிட்டு, கோலிவுட் பிரபல நடிகர்கள் இயக்குநர்கள் மீது செக்ஸ் புகார் கூறி வருகிறார்.
இயக்குநர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், சுந்தர்.சி மற்றும் நடிகர்கள் ராக்வா லாரன்ஸ், ஸ்ரீகாந்த் என்று ஸ்ரீரெட்டியின் முதல் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், மேலும் சில தமிழ் சினிமா பிரபலங்கள் பெயர்களை வெளியிட இருப்பதாக ஸ்ரீரெட்டி அறிவித்திருக்கிறார்.
இதற்கிடையே, ஸ்ரீரெட்டியின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு பல நடிகர், நடிகைகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, அவரை காட்டமாக விமர்சித்தும் வருகிறார்கள். அதே சமயம், நடிகையும் தயாரிப்பாளருமான குட்டி பத்மினி போன்றவர்கள் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாகவும் பேசி வருகிறார்கள்.
இந்த நிலையில், ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பிரபல காமெடி நடிகர் கருணாஸ் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கூறிய கருணாஸ், “அந்த பெண் பட வாய்ப்புகளை தருவதாக கூறி தன்னை பயன்படுத்திவிட்டு ஏமாற்றிவிட்டார்கள் என்று கூறிவருகிறார்.
இவ்வளவு பெரும் புகழும் இருக்கும் நீங்கள் இப்படி கேவலமாக நடந்து கொள்ளலாமா, உன்னிடம் பணமில்லையா? விபச்சாரம் அங்கீகரித்த நாடுகள் இருக்கிறதே, இடங்கள் இருக்கிறதே, அங்கு போக வேண்டியது தானே..!” என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.
ஸ்ரீரெட்டி மீது புகார் அளித்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகர்கள் சங்கத்தின் பொருளாளர் கார்த்தி கூறியிருக்கும் நிலையில், சங்கத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் கருணாஸ், ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசியிருப்பது சற்று சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...