‘ப்ளூவேல்’ எனப்படும் ஆன்லைன் விளையாட்டு உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. தற்கொலை விளையாட்டு எனப்படும் இது ஆன்லைனில் விளையாடப்படுகிறது. ஒவ்வொரு கட்டமாக ஒவ்வொரு டாஸ்க்குகளை செய்யும் போட்டியாளர்கள் இறுதியில் தற்கொலை செய்துக்கொள்ள முயற்சிப்பது தான் இந்த விளையாட்டின் இறுதி டாஸ்க்காம்.
உலக நாடுகளில் இருந்த இந்த விளையாட்டு மோகம், தற்போது இந்தியாவிலும் அதிகரித்து வர, இந்தியாவில் சிலர் இந்த விளையாட்டால் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்த தற்கொலை விளையாட்டு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷையும் பாதித்துள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரின் குடும்ப நண்பர் ஒருவர், இந்த விளையாட்டில் ஈடுபட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை பார்த்த சிலர் அவரை காப்பாற்றி விட்டார்களாம். இருந்தாலும், இந்த சம்பவம் ஐஸ்வர்யா ராஜேஷை பெரிதும் பாதித்துள்ளதாகவும், இதனால் அவர் மிகுந்த சோகத்தில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...