‘வனமகன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ள சாயீஷா, கைவசம் எராளமான படங்கள் இருக்கின்றன.
வனமகன் படத்திற்கு பிறகு கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜினிகாந்த் ஆகிய படங்கள் சாயீஷாவின் நடிப்பில் வெளியாகியுள்ள நிலையில், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடன் சாயீஷா நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று தனது 21 வது பிறந்தநாளை கொண்டாடிய சாயீஷா, அதற்காக நேற்று முன் தினம் இரவு சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தமிழ் சினிமா பிரபலங்களுக்கு மது விருந்து அளித்திருக்கிறார்.
நடிகர்கள் ஆர்யா, பிரபு தேவா, சதீஷ், இயக்குநர் விஜய் மற்றும் தயாரிப்பாளர்கள் என்று ஏராளமான சினிமா பிரபலங்கள் கலந்துக் கொண்ட இந்த விருந்தில் விடிய விடிய மது பார்ட்டி நடந்ததாகவும், அதில் பலர் மது போதையில் கும்மாளம் அடித்ததாகவும் கூறப்படுகிறது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...