’அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் தோல்வியால் துண்டுபோன சிம்பு தற்போது மீண்டும் துடிதுடிப்போடு இருக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் ‘செக்க சிவந்த வானம்’ செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியாகப் போகிறது. அப்படத்திற்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கும் ‘மாநாடு’ படமும் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சிம்பு நடிக்கும் முதல் அரசியல் படமான ‘மாநாடு’ அஜித் நடித்த ‘மங்காத்தா’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, மங்காத்தா படத்தில் எப்படி அஜித் ஹீரோ கம் வில்லன் என்று நடித்தாரோ அதேபோல் தான் ‘மாநாடு’ படத்திலும் சிம்பு வில்லத்தனம் கலந்த ஹீரோவாக நடிக்கிறாராம்.
அதுமட்டும் இன்றி, மங்காத்தா படத்தில் மறைமுகமாக அரசியல் செய்து அஜித் பணத்தை அபேஸ் செய்தார் என்றால், இந்த படத்தில் அதே ரூட்டில் சிம்பு பயணித்தாலும், நேரடியாக அரசியல் செய்வதும், அதன் மூலம் அவர் எதை நோக்கி பயணிக்கிறார் என்பதும், மங்காத்தா பட பாணியிலேயே இருக்குமாம். இதன் காரணமாகவே சிம்புவின் மாநாடு அஜித்தின் மங்காத்தா-வின் இரண்டாம் பாகமாகவும் கருதப்படுகிறதாம்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...