‘சுப்பிரமணியபுரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான சுவாதி, ஒரு ரவுண்ட் வருவார் என்ற எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தினாலும், அவரது அடுத்தடுத்த படங்கள் எதிர்ப்பார்த்த அளவு போகாததால், அவரது கோடம்பாக்க வாழ்க்கை சீக்கிரமே முடிந்தது.
தமிழ் சினிமா கைவிட்டதால் தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வந்த சுவாதியின் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘யாக்கை’. இதற்கு பிறகு அவருக்கு வேறு எந்த தமிழ்ப் படத்தின் வாய்ப்பும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், சுவாதிக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. அவர் தனது நீண்ட நாள் நண்பரான விகாஸ் என்பவரை திருமணம் செய்ய உள்ளாராம்.
சுவாதி - விகாஸ் திருமணம் ஆகஸ்ட் 30 ஆம் தேதி நடைபெற உள்ளது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...