தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரம்பா, தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருக்கிறார்.
இந்திரன் பத்மநாதன் என்ற கனடா தொழிலதிபரை திருமணம் செய்துக் கொண்ட ரம்பா, திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை தவிர்த்து வந்தார். பிறகு அவரது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சில காலங்கள் பிரிந்து வாழ்ந்தவர், தற்போது கணவருடன் மீண்டும் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.
ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகளுக்கு அம்மாவாக இருக்கும் ரம்பா, மூன்றாவது முறையாக கர்ப்பமாகியுள்ளார்.
இந்த நிலையில், ரம்பாவின் கணவர் இந்திரன், தனது மனைவிக்கு சமீபத்தில் சீமந்தம் செய்துள்ளார். முதல் முறை கர்ப்பமாகும் போது மட்டுமே சீமந்தம் செய்வது தான் வழக்கம், ஆனால் இந்திரன் மூன்றாவது முறையாக கர்ப்பமாகியுள்ள தனது மனைவி ரம்பாவுக்கு சீமந்தம் செய்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...