பிரபல திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித், தமிழக அரசுக்கு கலைகள் மீது அக்கறை இல்லை என்று விமர்சித்துள்ளார்.
சென்னையின் பிரபல ஓவியர்களில் ஒருவரான ஆண்டனி முனுசாமியின் ஓவியக் கண்காட்சி சென்னை எழும்பூரில் உள்ள லலித்கலா அகடமியில் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 11 ஆம் தேதி தொடங்கிய இந்த ஓவியக் கண்காட்சி ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர், பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட மறைந்த தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் திரைப்பட நடிகர்கள் என உலக அளவில் பிரபலமான பலரது ஓவியங்கள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது. முழுக்க முழுக்க பென்சிலை மட்டுமே பயன்படுத்தி இந்த ஓவியங்கள் வரையப்பட்டிருப்பது இதன் கூடுதல் சிறப்பாகும்.
ஆக்ஸ்ட் 11 ஆம் தேதி நடைபெற்ற இந்த ஓவியக் கண்காட்சியின் தொடக்க விழாவில் பிரபல திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பா.ரஞ்சித், “பிரபலமான ஓவியரான ஆண்டனி முனுசாமி, இந்த துறையில் பல ஆண்டுகளாக இருக்கிறார். எனக்கும் அவருடன் பல ஆண்டுகள் பழக்கம் இருக்கிறது. ஓவியக் கண்காட்சி என்பது ஒவ்வொரு ஒவியருக்கும் கனவாகும். அந்த வகையில் அண்ணன் ஆண்டனி முனுசாமியின் கனவு இது.
ரசிகர்களின் ரசனை என்றுமே மாறவில்லை. அவர்களது ரசனைக்கு ஏற்ப நாம் தான் ஓவியங்களை கொண்டு சேர்க்க வேண்டும். அவர்களுக்கு எந்தமாதிரியான விஷயங்கள் பிடிக்கிறதோ, அதை ஓவியமாக கொடுத்தால் நிச்சயம் மக்களை சென்றடையலாம்.
தமிழக அரசுக்கு கலைகள் மீது அக்கறை இல்லாதது பெரும் வருத்தமளிக்கிறது. குறிப்பாக ஓவியக் கலை மீது துளி கூட அக்கறை இல்லை என்பதை, அரசின் ஓவியக் கல்லூரியை பார்த்தாலே தெரிந்துவிடும். ஓவியக் கல்லூரியின் உள்கட்டமைப்பு, தற்போது கட்டப்படும் புதிய கட்டிடம் என்று எந்த விஷயத்திலும் கலையின் பிரதிபலிப்பே இருப்பதில்லை.” என்று தெரிவித்தார்.
ஓவியர் ஆண்டனி முனுசாமி, பெண்டாமீடியா உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களில் அனிமேஷன் துறையில் பணிபுரிந்த அனுபவம் பெற்றுள்ளார். தற்போது பல முன்னணி கிராபிக்ஸ் நிறுவனங்களில் அனிமேஷன் துறையில் உயர் நிலையில் இருப்பவர், சட்டம் படித்து அதன் மூலம் ஏழை எளியவர்களுக்கு இலவச சட்ட ஆலோசனைகளும் வழங்கி வருகிறார்.
ஓவியத்தை தொழிலாக எடுத்துக் கொண்டாலும் வழக்கறிஞராக சமூக பணிகளிலும் ஈடுபட்டு வரும் ஆண்டனி முனுசாமியின் ஓவியங்களிலும் அவரது சமூக அக்கறை தெரிகிறது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...