விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மெர்சல்’ வரும் தீபாவளி பண்டிகையன்று வெளியாக உள்ளது. பொதுவாக பெரிய படங்கள் வெளியாகும் போது வேறு எந்த படங்களையும் வெளியிட தயாரிப்பாளர்கள் முன் வருவதில்லை. காரணம், அனைத்து திரையரங்கங்களையும் அப்படங்கள் ஆட்கொண்டு விடும்.
ஆனால், தீபாவளியன்று சுசீந்திரன் இயக்கி தயாரித்துள்ள ‘நெஞ்சத்தில் துணிவிருந்தால்’ படமும் வெளியாகிறது. இது குறித்து இயக்குநர் சுசீந்திரன் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதையடுத்து விஜயுடன் சுசீந்திரன் போட்டி போடுவதாக கூறப்பட்டு வந்த நிலையில், “தான் விஜயுடன் போட்டி போடவில்லை. மெர்சல் ரிலீஸுடன் நானும் வருகிறேன். 2013 ஆம் ஆரம்பம் வெளியான போது பாண்டிய நாடு வெளியானது. இரண்டு படமும் வெற்றி பெற்றது. அதனால் நான் யாருடனும் போட்டியிடவில்லை, என்று சுசீந்திரன் விளக்கம் தெரிவித்தார்.
இந்த நிலையில், ’ஐய்யனார் வீதி’ படத்தை தயாரித்து அதில் வில்லனாக நடித்த செந்தில்வேல், தனது பேஸ்புக் பக்கத்தில், சுசீந்திரனின் கடிதத்தை வெளியிட்டு, “எனது படம் ‘பாகுபலி2’ வெளியான போது ரிலீஸ் ஆனது. அப்போது நானும் இப்படித்தான் மிரட்டப் பட்டேன். தற்போது சுசீந்திரனுக்கும் அந்த நிலை ஏற்பட்டுள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
அப்படி என்றால் இயக்குநர் சுசீந்திரன் மிரட்டப்பட்டிருப்பாரோ, அப்படி மிரட்டப்பட்டிருந்தால், அவரை மிரட்டியவர்கள் யாராக இருக்கும், போன்ற கேள்விகள் கோடம்பாக்கத்தில் வலம் வர தொடங்கியுள்ளன.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...