மறைந்த திமுக தலைவர் மு.கருணநிதியின் நினைவேந்தல் நிகழ்ச்சி திரைத்துறை சார்பில் நேற்று சென்னையில் நடத்தப்பட்டது. நடிகர் சங்கம் சார்பாக நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் பல திரையுலக பிரமுகர்கள் கலந்துக்கொண்டனர். நடிகர் ரஜினிகாந்த், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரும் இதில் கலந்துக்கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், கருணாநிதியின் இறுதிச் சடங்கில் தமிழக முதல்வர் பங்கேற்காததற்கு கண்டனம் தெரிவித்ததோடு, மெரீனாவிடல் இடம் வழங்க மறுத்த தமிழக அரசு நீதிமன்ற உத்தரவுக்கு மேல் முறையீடு செய்திருந்தால் தானே போராடியிருப்பேன், என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ரஜினிகாந்தின் பேச்சுக்கு பதில் அளித்திருக்கும் அமைச்சர் ஜெயக்குமார், “கருணாநிதியால் தான் அதிமுக உருவானது என்று தவறான கருத்தை ரஜினி கூறியுள்ளார். முதலில் மறைந்த ஒரு தலைவருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சியில் இதுபோல் அரசியல் பேசுவது ஆரோக்கியமான முறையல்ல.
அதிலும் அரசியலே தெரியாமல், வரலாறே தெரியாமல் ரஜினி வாய் புளித்தது மாங்காய் புளித்தது என்று பேசியது அவரது அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது.
இது போல் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருந்த போது ரஜினி இப்படி பேசுவதற்கு தைரியம் இருந்ததா, அப்போது ஓடி ஒளிந்துக் கொண்டார் ரஜினி. அவர்கள் முன்னால் இப்படி பேசியிருந்தால் ரஜினி நடமாடியிருக்கவே முடியாது.” என்று பகிரங்கமாக மிரட்டும் வகையில் பேசினார்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...