தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வந்த சத்யராஜ், 125-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் நிலையில், தற்போது அப்பா உள்ளிட்ட குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். ‘பாகுபலி’ படத்தில் அவர் நடித்த கட்டப்பா கதாபாத்திரம் பெரும் பாராட்டுப் பெற்றது.
இந்த நிலையில், தொடர்ந்து பல அப்பா கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்புகள் வருவதாக தெரிவித்திருக்கும் சத்யராஜ், அப்பா வேடங்களில் நடிப்பதில் தனக்கு விருப்பம் இல்லை என்றும் கூறியுள்ளார்.
மக்கள் சிந்தனை பேரவை சார்பில் ஈரோட்டில் நடைபெறும் புத்தக திருவிழாவில் கலந்துக் கொண்டு பேசிய சத்யராஜ், ”வில்லனாகவும், கதாநாயகனாகவும் நடித்து நிறைய சம்பாதித்து விட்டேன். போதும் இனியும் நாம் நடித்தால் அப்பா வேடத்தில்தான் நடிக்க வேண்டும். அப்பா வேடத்தில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை.
இப்படி ஒதுங்கி இருக்கும் போதுதான் தெலுங்கு படம் ஒன்றில் என்னை நடிக்க கேட்டார்கள். தெலுங்கில் பெரிய நடிகர் கோபிசந்த் அவருக்கு அப்பாவாக நடிக்க அழைத்தார்கள். படத்தின் டைரக்டர், தயாரிப்பாளர், டெக்னீசியன்கள் என அனைவரும் தமிழர்கள். ஆனால் படம்தான் தெலுங்குபடம்.
படத்தின் கதாநாயகி நடிகை திரிஷா. என்னை மாமாகாரு என்று படத்தில் கூப்பிட்டபோதே செத்தேன். போதுமடா சாமி இனி அப்பா வேடம் எல்லாம் வேண்டாம் என நினைத்தேன்.
இடையில் ‘பாகுபலி’ படத்தில் கட்டப்பா வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நடித்தேன். பெயரும் கிடைத்தது. இத்தோடு சரி என்று நினைத்து ஒதுங்கி இருக்கிறேன். நடித்து சம்பாதித்தது போதும். சந்தோஷமாக இருக்கிறேன்.” என்று கூறியிருக்கிறார்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...