‘செக்க சிவந்த வானம்’ படத்தை முடித்துவிட்ட சிம்பு, தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பிறகு சுந்தர்.சி இயக்கும் படத்தில் நடிக்கிறார். தெலுங்குப் படத்தின் தமிழ் ரீ மேக்கான இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் நேற்று வெளியிட்ட நிலையில், இப்படம் குறித்த மேலும் பல தகவல்கள் கசிந்திருக்கிறது.
இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்க இருக்கிறாராம். தற்போது இது குறித்த பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம்.
தனுஷின் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் மூலம் மேகா ஆகாஷ் சினிமாவில் நடிக்க தொடங்கினார். அப்படம் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், அதர்வாவுக்கு ஜோடியாக ‘பூமரங்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், தற்போது சிம்புவுக்கு ஜோடியாக உள்ளார்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...