தமிழ் சினிமாவின் முன்னணி மாஸ் ஹீரோவாக வலம் வரும் அஜித், படங்களில் நடிப்பது மட்டும் இன்றி, சினிமாவை தவிர்த்து வேறு சில விஷயங்களிலும் ஆர்வமுடையவர்.
பைக் ரேஸியில் ஈடுபட்டு வந்த அவர் தற்போது அதில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், புகைப்படம் எடுப்பது, சமையல், குட்டி ரக விமானங்களை இயக்குவது, துப்பாக்கி சுடுதல் ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறார்.
சென்னையின் பிரபல கல்கலைக்கழகத்தில் விமானம் பற்றி படிக்கும் மாணவர்களுக்கு ஆலோசகராக பணியாற்றிய அஜித், அம்மாணவர்கள் போட்டி ஒன்றில் வெற்றி பெற உறுதுணையாக இருந்தார்.
இந்த நிலையில், தமிழக அரசின் அப்துல்கலாம் விருது, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள வான்வெளி ஆராய்ச்சி மையமான தக் ஷா குழுவுக்கு வழங்கப்படுகிறது. இந்த தக் ஷா குழுவிற்கு தான் அஜித் பொருப்பாளராகவும், ஆலோசகராகவும் இருந்தார்.
அதன்படி, தமிழக அரசு வழங்கும் இந்த உயரிய கெளரவத்திற்கு அஜித்தும் சொந்தக்காரர் என்பதால், அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...