மலையால நடிகையான மஞ்சுமா மோகன், ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானர். அதன் பிறகு ஒரு சில தமிழ்ப் படங்களில் நடித்தவர், தற்போது ‘தேவராட்டம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
தொடர்ந்து பல மலையாளப் படங்களிலும் நடித்து வரும் மஞ்சுமா, ஆந்திர முதல்வர் சந்திரபாபுவுக்கு மனைவியாகப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, ஆந்திராவின் முன்னாள் முதல்வர் என்.டி.ஆரின் வாழ்க்கை திரைப்படமாகிறது. இதில் என்.டி.ஆரின் மகன் பாலகிருஷ்ணா என்.டி.ஆர் வேடத்தில் நடிக்க, அவரது மருமகன், அதாவது தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வேடத்தில் ராணா நடிக்கிறார்.
இந்த நிலையில், என்.டி.ஆரின் மகள் புவனேஸ்வரி வேடத்தில் மஞ்சுமா மோகன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. என்.டி.ஆரின் மகள் புவனேஸ்வரி தான் சந்திரபாபு நாயுடுவின் மனைவி என்பதால், மஞ்சுமா மோகன் சந்திரபாபு நாயுடு வேடத்தில் நடிக்கும் ராணாவுக்கு ஜோடியாகிறார்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...