‘ஏஏஏ’ படத்திற்கு பிறகு சிம்புவை வைத்து படம் எடுக்க இனி யாரும் வர மாட்டாரகள், என்று ஒட்டு மொத்த தமிழ் திரையுலகமே நினைத்தது. ஆனால், மணிரத்னத்தின் ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் சிம்பு காட்டிய ஈடுபாடும், ஒத்துழைப்பு குறித்து கேள்விட்ட சினிமா தயாரிப்பாளர்கள் பலர் தற்போது சிம்புவை வைத்து படம் தயாரிக்க முன்வருகிறார்கள்.
அதன்படி, தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ படத்தில் நடிக்கும் சிம்பு, அடுத்ததாக சுந்தர்.சி இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் சில படங்களில் நடிக்க இருக்கும் அவர் இரண்டு வருடங்களுக்கு இப்போதே பிஸியாம்.
இதற்கிடையே, ‘வல்லவன்’ படத்தின் போது நயந்தாராவை காதலித்து வந்த சிம்பு, அவருடன் லிப் டூ லிப் முத்தமிடுவது போன்ற புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிம்புவின் காதலை நயந்தாரா விட்டிய பிறகே இந்த புகைப்படம் லீக்கானதால் இது சிம்புவின் வேலை தான் என்று பலர் கூறினார்கள்.
ஆனால், இது குறித்து அப்போது சிம்பு எந்த விளக்கமும் கூறவில்லை, அதேபோல், நயந்தாரா தரப்பிலும் இது பற்றி எதுவும் பேசவில்லை.
இந்த நிலையில், நயந்தாராவுடனான லிப் டூ லிப் முத்தமிடும் புகைப்படம் வெளியானது குறித்து தற்போது சிம்பு மனம் திறந்துள்ளார்.
இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய அவர், ”துபாயின் புது கேமரா வாங்கிய போது அந்த புகைப்படம் எடுத்தோம், ஆனால், அதை யாரோ லீக் செய்துவிட்டார்கள். அந்த நிகழ்வு என்னை மிகவும் பாதித்தது, என்னால் ஒரு பெண் பெயர் கெடுகின்றதே என்று, நான் எந்த பெண்ணிடமும் அவர்கள் அனுமதியில்லாமல் தொட்டது கூட இல்லை.” என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...