மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதாவின் வாழ்க்கை திரைப்படமாக உள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தை வைப்ரி மீடியா நிறுவனம் தயாரிக்கிறது.
தெலுங்கில் உருவாகி வரும் என்.டி.ஆரின் வாழ்க்கை திரைப்படம் மற்றும் இந்தியில் உருவாகி வரும் கிரிக்கெட் வீரர் கபில் தேவின் வாழ்க்கை திரைப்படமான ‘83 உலகக் கோப்பை’ ஆகிய திரைப்படங்களை வைப்ரி மீடியா தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சினிமாத் துறையில் கொடிகட்டி பறந்த ஜெயலலிதா அரசியலிலும் மிகப்பெரிய ஏற்றம் கண்டார். இந்திய அரசியலில் முக்கியமான பெண் தலைவராக கருதப்படும் அவரது சாதனைகள் ஏராளாம். பெண்களுக்கான வழிகாட்டியாகவும், உலக அளவில் பெண்களுக்கான முன்னுதாரணமாக விளங்கிய ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24 ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருப்பதோடு, அன்றே இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட உள்ளது.
இப்படத்தில் ஜெயலலிதாவின் வேடத்தில் நடிப்பதற்காக முன்னணி ஹீரோயின் ஒருவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வரும் படக்குழுவினர் அது குறித்த விபரத்தை ரகசியமாக வைத்திருப்பதோடு, படத்தின் பஸ்ட் லுக் வெளியிடும் போதே அந்த நடிகை யார்? என்ற தகவலையும் வெளியிட இருக்கிறார்கள்.
தற்போது தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு மற்றும் இந்தியிலும் தனது படங்களை வெற்றிப் படங்களாக்கி வரும் இயக்குநர் விஜய், தான் இப்படத்தை இயக்குகிறார்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...